இலங்கையில் ஏராளமான கொரோனா கொத்தணிகள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தல்.
இலங்கையில் ஏராளமான கொரோனா கொத்தணிகள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்.
நாட்டில் ஏராளமான கொரோனா தொற்று கொத்தணிகள்; உருவாகி வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது,
பல கொத்தணிகள் தோன்றியுள்ளமையால்; தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், நாடு முழுவதும் நோய் பரவுவதற்கான அறிகுறியாக இதை பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் சுகாதார விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா பரவல் காரணமாக மேல், வடமேல் மற்றும் திருகோணமலை கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment