Header Ads

test

நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி.

 நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (02.04.2021) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி பயிலும் உ. அபினேஷன் என்ற மாணவரே (வயது – 15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும் இன்று இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச்சென்றுள்ளனர்.

இவ்வாறு நீராடிக்கொண்டிருக்கையில் குறித்த சிறுவன், சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு சிறுவனும் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்தனர். தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

தேடும் நடவடிக்கை 3 மணிநேரம் தொடர்ந்ததும். அதன்பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இரு சிறார்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments