தாய் மற்றும் மகன் இருவரும் விசமேறி மரணம் - பல கோணங்களில் பொலிஸ் விசாரணை.
பொலன்னறுவை- பிஹிடிவெவ- நுவரகல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு உடலில் விஷமேறியமையினால் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளனர்.
6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment