Header Ads

test

முடியாதவன் கையில் எடுக்கும் முதல் முயற்சியே தற்கொலை................!!!

தற்கொலை செய்பவர்கள் 

தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையுமே முதலில் கொலை  செய்கிறார்கள் 

அதன் பின்பே தம்மை தாமே அழித்து கொள்கிறார்கள்.......!!!  

தன் உயிரை எவ்விதத்தில் மாய்க்கலாம் என்று  பல மணிநேரம் பல விதமாக சிந்திப்பவர்கள்  ஏன் ஒரு கணம்

அதிலிருந்து மீண்டு தன்

இஸ்டப்படி வாழ முயற்சிப்பதிலை......???

தூக்கு கயிற்றிலும் விசப்போத்தலிலும் காட்டும் அதீத நம்பிக்கை  

தம் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் 

காட்ட தவறுவதிலிருந்தே 

ஆரம்பிக்கின்றது 

இவர்களது கோழைத்தனம்....!!!

மரணிக்க போகிறேன் என்று தெரிந்த கட்டெறும்பு கூட 

தன்னை தீண்டியவரை 

ஒருமுறை கடித்துவிட்டு

இறக்வேண்டுமென முயற்சிக்கும் போது.....;

ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் 

தன் உயிரை மாய்க்க 

முயற்சிக்கிறானே தவிர 

அதிலிருந்து விடுபட்டு வாழ நினைப்பதில்லை......!!!

மனிதனுக்கும் மற்றவைக்குமிடையில் காணும் வித்தியாசங்கள் சற்று  

வியக்கத்தான்  செய்கிறது.....!!!

சிந்திக்க தெரிந்தவனும் 

சிரிக்க தெரிந்தவனும் 

மனிதன் மட்டும்தான் என்பது கூட மரணத்தை தேடும் மானிடனுக்கு புரிவதில்லையே........!!!

தற்கொலை என்பது தீர்வல்ல 

முடியாதவன் கையில் எடுக்கும் முதல் முயற்சியே தற்கொலை................!!!

      - வவுனியூர் ரஜீவன் 



No comments