எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
இன்றைய தினம் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை முதலான இடங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளை முதல், மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளன.
கொவிட்-19 பரவல் காரணமாக, ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வழமை போன்று அலுவலக தொடர்ந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment