Header Ads

test

ஹெரோயின் கடத்திய தம்பதியினர் அச்சுவேலி பொலிஸாரால் கைது.

 பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்லைச் சந்தியில் வைத்து இன்று மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை, வியாபாரி மூலையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பத்தலைவரும் 38 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.


No comments