மூன்றரை வயதுக் குழந்தை விபத்தில் பலி
வான் மோதி மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பதுளை - முடகமூவை பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பதுளைப் - முடகமூவ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த நெத்மி நிசன்சா என்ற மூன்றரை வயதுடைய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் -
குழந்தை வீட்டின் முன்னால் பாதையில் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பாதையில் பயணித்த வான் குழந்தை மீது மோதியுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தானது சாரதியின் கவனயீனத்தினாலேயே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதியைக் கைது செய்த பொலிஸார், விசாரணையின் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment