Header Ads

test

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இன்று காலை சிலிண்டர் வெடித்து விபத்து.

 இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் முழுவீச்சில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இன்று காலை சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயமடைந்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments