Header Ads

test

இளம் வயது தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - சம்பவத்தில் பரிதாபகரமாக குழந்தை உயிரிழப்பு.

 இளம் வயது தாயொருவர், தனது கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் மஹியங்கனை பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது.

குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக கணன் மனைவிக்கு இடையில் , கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்ட து.

இதனையடுத்து, மன வேதனை அடைந்த தாய் தனது பதினைந்து மாத ஆண் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த சம்பவத்தைக் கண்ட அயலவர்கள் ஓடி சென்று, அந்த கிணற்றில் இருந்து தாயையும், குழந்தையையும், மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக மஹியங்கனை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட கை குழந்தை இறந்துள்ளது.

சம்பவத்தில் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த மாப்பாகடவெவ கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தாய் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் .

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் , மஹியங்கனைப் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


No comments