கோர விபத்து- ஸ்தலத்திலேயே மூன்று பெண்கள் பலி.
நுவரெலியாவிலிருந்து எல்லை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மீது கனரக லொறியொன்று மோதி குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலியனதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி (பிறேக்) செயற்படாமல் போனதாலேயே, முச்சக்கர வண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment