யாழில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தீ வைத்து எரிப்பு.
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்த சில்லாலையில் இன்று 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில் தேடுதல் மேற்கொண்டபோது கவனிப்பாரற்று காணப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ கஞ்சா காணப்பட்டதை அவதானித்த கடற்படையினர் அதனை இன்று (28) காலை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக இளவாலை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின், பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மாலை கைப்பற்றப்பட்ட 240 கிலோ கேரள கஞ்சா யாவும் கொரோனா அச்சம் காரணமாக கடற்படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இவை இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Post a Comment