Header Ads

test

வாகன விபத்தில் 20 வயது யுவதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

 அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தள்துவ பொது சந்தைக்கு அருகில் நேற்று முன் தினம் இரவு (01/04) ஏற்பட்ட வாகன விபத்தில் 20 வயது யுவதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் இரவு 11: 30 மணியளவில் குறித்த யுவதி தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும் போது தளதுவ அமித்திரிகல வீதியை கடக்க முற்பட்டபோது அமித்திரிகல இருந்து அவிசாவளை நோக்கி கனரக டிப்பர் லாரியில் மோதியே குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 466 குருகல்ல வீதி தள்துவ அவிசாவளை விலாசத்தை சேர்ந்த கம்லஸ்சகே சசினி கௌசல்யா கம்லஸ்ச என்ற யுவதி என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன சாரதி அவிசாவளை பொலிசாரால் கைது செய்து அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


No comments