வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது.
வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகரப் பகுதியில் நேற்று (29.04) மாலை விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கந்தசாமி கோவில் வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை மறித்து சோதனை செய்த போது குறித்த இளைஞனிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கபபட்டது.
குறித்த ஹெரோயின் போதைப் பொருளை மீட்ட பொலிசார் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment