Header Ads

test

கொவிட்-19 தொற்றால் நேற்றைய தினம் இரண்டு மரணங்கள்.

கொவிட்-19 தொற்றால் நேற்றைய தினம் இரண்டு மரணங்கள் பதிவாகின.

இதற்கமைய கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.

ஹரிவட்டுன பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் மரணித்தார்.

கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் தீவிரமடைந்த சிறுநீரக நோய் இந்த மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் கரவெட்டி பகுதியை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்று மற்றும் குருதி விஷமானமை காரணமாக நேற்றைய தினம் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments