களுத்துறை மாவட்டத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்.
களுத்துறை மாவட்டத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொல்லுன்ன, இங்குருதலுவ, மிதலன, மோறப்பிட்டிய, பெலேந்த, ஹதிகல்ல, மோறப்பிட்டிய வடக்கு, திஹினியாவல ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வலல்லாவிட்ட வடக்கு, மாகலந்தாவ, போதலாவ, கட்டுகெலே வல்மீகொட, பஹல ஹெவெஸ்ஸ, மிரிஸ்வத்த மற்றும் பெலவத்த கிழக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தனபதி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment