08.04.2021 இன்றைய நாள் எப்படி.
மேஷராசி அன்பர்களே!
காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக் கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். முருகப்பெருமானை வழிபடு வது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
ரிஷபராசி அன்பர்களே!
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளிடமிருந்து எதிர் பார்த்த தகவல் கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,
மிதுனராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசி யம். இன்று விநாயகரை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கடகராசி அன்பர்களே!
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
சிம்மராசி அன்பர்களே!
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவி களும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப்பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அம்பிகையை வழிபடுவது நன்று.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படக்கூடும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
கன்னிராசி அன்பர்களே!
சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
துலாராசி அன்பர்களே!
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். நரசிம்மர் வழிபாடு சிறப்பு.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
விருச்சிகராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
தனுசுராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப் பது உற்சாகம் தரும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மகரராசி அன்பர்களே!
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
கும்பராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் காரியம் அனுகூலமாகும்.
மீனராசி அன்பர்களே!
மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால் சிறிது கடன் வாங்கவேண்டி வரும். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
Post a Comment