புதியவகை கொரோனா வைரஸ் (covid -b.1.351) தொற்றுக்கு உள்ளான ஒருவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் (covid -b.1.351) தொற்றுக்கு உள்ளான ஒருவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்துள்ளார்.
தன்சானியாவில் இருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 520பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் அச்சநிலைமை குறித்து, அரசாங்கம் உட்பட பொதுமக்கள் புரிதல் இன்றி செயற்படுவதாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர்.பரிசோதனை குறைக்கப்படுவதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவலடையும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment