Header Ads

test

திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்.

திமிங்கலத்தின் வாந்தியால்  கோடீஸ்வரியாகமாறிய பெண்.தாய்லாந்தைச் சேர்ந்த சிரிபான்(49) என்ற பெண் கடற்கரையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது வித்தியாசமான பொருள் ஒன்று கடற்கரையோரம் ஒதுங்கி கிடப்பதை பார்த்துள்ளார். அருகே சென்று பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. ஆம் விலை உயர்ந்த திமிங்கலத்தின் வாந்தி.

திமிங்கலத்தின் வாந்தி ஒரு அறிய பொருள், அது அதன் விந்தணுச் சுரப்பியில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கி உருவாகும்.

இது, வாசனை திரவியங்களின் முக்கிய பொருளாகும். திமிங்கலத்தின் வாந்தி கலந்து உருவாக்கப்படும் வாசனை திரவியங்கள் விலை உயர்ந்தவை. அப்படிப்பட்ட அரியவகை பொருளான திமிங்கலத்தின் வாந்தியை பெறுவதற்கு முன்னணி வாசனை திரவிய நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன.

அது தான் கடற்கரையில் சிரிபானுக்கு கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் வாந்தியைத் தான் சிரிபான் கண்டெடுத்துள்ளார்.



No comments