Header Ads

test

கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது - பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு.

 கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

1970ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டின் கல்வி கட்டமைப்பு மறுசீரமைக்கப்படவில்லை. பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்படுவது மாத்திரமன்றி, சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

புத்திஜீவிகள், மதகுருமார்கள், பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை சமூகம், பொதுமக்கள், ஊடகவியலாளர் உள்ளிட்ட சகலரது ஆலோசனைகளும் இதற்காக பெறப்படவுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.



No comments