கொஹுவல நகரில் தீவிபத்து.
கொஹுவல நகரில் வாகனங்களை பழுது பார்க்கும் இடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து தற்போது கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் தெஹிவலை- கல்கிசை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்துகட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.
இத் தீவிபத்தினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment