அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலவும் பலத்த மழை காரணமாக 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக நியூசவுத் வேல்ஸ் பகுதியிலிருந்து 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் ஆறுகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment