முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட உறுப்புரிமை நீக்கல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.
கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் தம்மிக்க சந்திர ரத்னவின் உறுப்புரிமையை ரணில் விக்கிரமசிங்க இரத்து செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அதற்கமைய குறித்த உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் உத்தரவிட்டது.
Post a Comment