Header Ads

test

பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியுள்ளார்.

இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி போக்குவரத்து சிக்கலை தீர்க்க ஒருவரிடம் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சமாக பெற்றுள்ளார்.

 இந்த நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்த போது 5,000 ரூபாய் 2 நாணயத்தாளை (10,000) அவர் விழுங்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.



No comments