Header Ads

test

காட்டை காயப்படுத்திய பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது.

பத்தேகம - திபில்ல வனப்பகுதியினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பத்தேகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பத்தேகம - திபில்ல வனப்பகுதி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.


No comments