Header Ads

test

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இரு சக மாணவர்கள் பொலிசாரால் கைது.

 தென்னிலங்கையில் 15 வயதான மாணவியை துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம் 10 இல் மாணவியுடன் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அதே வகுப்பிலுள்ள இன்னொரு மாணவருடன் பேசி வரும் நிலையில் அதை இரகசியமாக வீடியோ எடுத்த மாணவர்கள் மாணவியை மிரட்டியுள்ளனர்.

அதோடு தாம் சொல்வதை போல நடக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வீடியோவை வீட்டிற்கு காண்பிப்போம் எனவும் மாணவியை மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த குறித்த மாணவி, தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வருகின்றார். இந்த விடயம் சகோதரிக்கு தெரிந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்களின் சொற்படி மாணவி செயற்பட்டுள்ளார்.

இதனை சாதகமாக பயன் படுத்திய அந்த மாணவர்கள் மாணவியை தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த மாணவியின் சகோதரி, கெக்கிராவ கெக்கிராவா பொலிஸின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறையிட்டார். இதனையடுத்து பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் இந்திராணி துரிதமாக செயற்பட்டு மாணவர்கள் இருவரையும் கடந்த 25ஆம் திகதி கைது செய்தார்.

அத்துடன் பதிக்கப்பட்ட துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி கெக்கிராவ மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கெக்கிராவ மாவட்ட நீதிவான் கே.கே.ராணியகொட, மாணவர்கள் இருவரையும் அநுராதபுரம் அபயா சிறுவர் இல்லத்தின் தங்க வைக்க உத்தரவிட்டதுடன், வரும் 31ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுக்கின்றது.



No comments