Header Ads

test

இலங்கையில் இழைக்கப்பட்ட கொடுரங்களுக்குரிய சாட்சிகளை திரட்டும் பொறிமுறை.

 இலங்கையில் இழைக்கப்பட்ட கொடுரங்களுக்குரிய சாட்சிகளை திரட்டும் பொறிமுறைக்கு அழைப்பு விடுத்தார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மெக்டோக்.

பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று விவாதத்தை ஆரம்பித்த தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சிபோன் மெக்டோக், இலங்கை அரசாங்கம் தமிழினத்துக்கு இழைத்த கொடூரங்களை பட்டியலிட்டு உரையாற்றியதுடன்,

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புகூறல் மற்றும் மனிதஉரிமைகளை மேம்படுத்தும் விடயத்தை பிரித்தானியா கைவிடமுடியாதெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதனடிப்படையில் தற்போது இலங்கை தொடர்பாக அடுத்தவாரம் ஐ.நாமனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் இன்றைய விவாதத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் பங்கெடுக்காதமைக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்களிப்புக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்


பிடத்தக்கது.

No comments