பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி.
ஏ 9 வீதியில், பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும் அதற்கு நேரெதிரே வருகை தந்த டிப்பர் வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Post a Comment