Header Ads

test

விடுதியில் தங்கியிருந்தவர் திடீரென மரணம்.

வவுனியா விடுதியில் யாழப்பாணத்தைச் சேர்ந்தவருடன் தங்கியிருந்த கொழும்பு தெகிவளையைச் சேர்ந்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று சனிக்கிழமை (6) இரவு நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்.

வவுனியா முதலாம் குறுக்கு தெருவிலுள்ள விடுதியொன்றில் தெகிவளையை சேர்ந்த ஒருவரும் , யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்கள் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு தெகிவளைவாசிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதையடுத்து விடுதிக்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் விடுதியில் வந்து தங்கியிருக்கின்றார்கள்.

இவர்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மயக்கமுற்று தெகிவளையை சேர்ந்த குறித்த நபர் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் 1990 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு மற்றைய நண்பன் கொண்டு சென்றிருக்கிறார்.

குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னரே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கொழும்பு தெகிவளையை சேர்ந்த 48 வயது ஜெகநாதன் உதயராஜ் என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் திடீரென எவ்வாறு இறந்தார்? இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் மரணித்தவருக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக குறித்த நபரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



No comments