பசறையில் விபத்துக்குள்ளான பஸ் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்.
பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் நடந்த பாரிய விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெறும் நிலையில் குறித்த பஸ் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த பஸ் தேசிய போக்குவரத்து ஆணையத்தால் (என்.டி.சி) கண்காணிக்கப்படும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலான் மிரண்டா நேற்று தெரிவித்தார்.
அந்த பஸ் ஜி.பி.எஸ் தொழில்நுட்ப சிம் கார்ட்டை பெற்றாலும் அதை செயற்படுத்தத் தவறிவிட்டதாகவும், எனவே பஸ் தமது கட்டமைப்புக்குள் இணைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ்களின் வேகத்தையும் பாதையையும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பமே ஜி.பி.எஸ் தொழில்நுட்பமாகும்..
இதில் 3069 பஸ்களில் 1168 பஸ்கள் மட்டுமே ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தர உறுதி பிரிவின் இயக்குநர் ஷெரின் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
Post a Comment