Header Ads

test

இராணுவத்தினர் தகவல் சேகரிப்பு - மக்கள் அச்சத்தில்.

வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரித்து வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வவுனியா புதிய சேலர் சின்னக்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாக செல்லும் நான்கு இராணுவத்தினர் இவ்வாறான பதிவு மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இப் பதிவின் போது குடியிருப்பாளர்களிடம் வாழ்வாதாரம் தரப்போகின்றோம் என இராணுவத்தினர் தெரிவிப்பதாகவும் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், வயது தொலை பேசி இலக்கம் என்பவும் கோரப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் இராணுவத்தினரால் இவ்வாறு தகவல் சேகரிக்கப்படுகின்றமை தொடர்பில் தமக்கு அச்சமான நிலை காணப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.



No comments