Header Ads

test

சீனாவில் வவ்வாலால் ஆரம்பித்த வைரஸ்.

 கொரோனா வைரஸ் உருவாகி ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் கட்டுக்குள் இல்லாமல் பரவி வருவது பெரும் அதிர்ச்சியையே மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமே முககவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவேளியை பின்பற்றாமல் இருப்பதுமே என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ், மற்ற 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலில் பரவி வந்தாலும், இந்த வைரஸ் ஆனது முதலில் வவ்வாலிடம் இருந்தே பரவி இருக்க கூடும் என கூறி வந்தனர்.

இதையடுத்து சமீபத்தில் நடத்திய ஆய்வில், தென்மேற்கு சீனாவில் 4 கி.மீ. கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அவற்றில், 4 வைரசுகள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசுகளுடன் தொடர்புடையவை என தெரிய வந்துள்ளது.

மேலும், அவற்றில் ஒரு வைரசானது கொரோனா வைரசின் மரபணுவை சுமந்திருந்தது.

இதனிடையே, இந்த நெருங்கிய, ஒத்து போக கூடிய (RpYN06) வைரசானது, கொரோனா வைரசின் மரபணுவுடன் 94.5 சதவீதம் ஒத்த தன்மையை கொண்டுள்ளது.

இதனால், பல வருடங்களுக்கு முன் யுன்னானில் சேகரிக்கப்பட்ட (RaTG13) என்ற வைரசானது, கொரோனா வைரசுடன் 96 சதவீதம் ஒத்து போகிறது என ஷி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், சூடான பருவநிலை மற்றும் கைவிடப்பட்ட விலங்கினங்கள் ஆகியவை, வெவ்வேறு வைரசுகள் போட்டி போட்டு ஒன்றிணைந்து புதிய வகை வைரசுகளை உருவாக்க அனுமதிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.



No comments