இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூரம் - யாழில் சம்பவம்.
யாழ்ப்பாணத்தில் கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று நபர்கள் இரும்புக் கம்பியினால் மிக மூர்க்கமாத் தாக்கி, மயக்கமுற்ற பின்னர் வீதியால் இழுத்துச் சென்று வீசியுள்ளனர்.
தாக்கப்பட்டவரது கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
Post a Comment