சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் உடனடியாக அறியப்படுத்துமாறு காவல்துறை தலைமையகம் அறிவிப்பு.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் உடனடியாக அறியப்படுத்துமாறு காவல்துறை தலைமையகம் சகல காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் தொடக்கம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் வரை இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக 1997 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Post a Comment