குருக்கள்மடம் பகுதியில் பட்டா வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.
குருக்கள்மடம் பகுதியில் பட்டா வாகனம் ஒன்று வேலியை பிரித்துக் கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த பட்டாரக வாகனம் ஒன்று மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகிலிருந்த வீட்டு வேலியில் மோதியுள்ளது. இதனால் வீட்டு வேலி உடைந்து சேதமடைந்துள்ளதுடன், குறித்த வாகனமும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இரண்டுபேரும் சிறு காயங்களுக்குள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment