Header Ads

test

இலங்கையில் கொரோனா தொற்றால் இன்றும் ஐவர் உயிரிழப்பு.

 இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக இறுதியாக 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணி வரை 292 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 86, 977ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 83 561 பேர் குணமடைந்துள்ளதோடு , 2767 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரும், அங்குலான பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவரும் மத்தேகொட பகுதியைச் சேர்ந்த 80 வயதான பெண்ணொருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரும் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆணொருவருமே இவ்வாறு இறுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments