Header Ads

test

கொழும்பு டாம் வீதியில் பயணப்பொதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பெண்ணின் கடிதம் மீட்கப்பட்டுள்ளது.

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடங்கிய பயணப்பொதியை கொழும்பு - டாம் வீதியில் விட்டுச்சென்ற நபர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் மீட்கப்பட்டுள்ளது.

இரு பக்கங்களைக் கொண்ட குறித்த கடிதத்தில்,

“எனது மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக இருங்கள். சிறிது காலம் கழித்து துக்கம் நீங்கிவிடும்.

உலகம் அடங்கிவிடும், இருக்கின்றது, இல்லாமல் போகின்றது. அதுதான் உலகின் தர்மம்” என்பது அவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும் குறித்த யுவதியுடன் தான் நெருங்கி பழகி வந்ததாகவும், யுவதியினால் தனக்கு தொடர்ச்சியாகவே தொல்லைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் காணப்பட்ட தகாத உறவே, இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மார்ச் முதலாம் திகதி கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது பெண் ஒருவரின் சடலம் பயணப் பை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த பெண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத பெண் என தெரியவந்தது.

இதில் சந்தேகநபராக புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய ஓய்வுபெற்ற துணை பொலிஸ் அதிகாரி காணப்பட்டார்.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக படல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக காணப்பட்டார்.

சடலத்தின் அருகே விஷ போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர் விஷத்தை உட்கொண்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்தே இறுதியாக அவர் எழுதி வைத்த கடிதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.



No comments