மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் இரு தாதியர்கள் பலவந்தமாக பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது .
மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் இரு தாதியர்கள் பலவந்தமாக பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண,
சுமார் ஒரு மணிநேரமாக குறித்த தாதியர் இருவரும் கதிர்வீச்சு அறையில் பலவந்தமாக பூட்டப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட தாதியர்கள் மகரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரண்டு கதிரியக்க நிபுணர்கள் மீது குறித்த தாதியர்கள் முறைப்பாடு செய்த நிலையில் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற கதிரியக்க நிபுணரை கைது செய்ய பொலிஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு கதிரியகக நிபுணர்கள் மீது பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் தாதியர்களை அவர்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இடத்தில் தடுத்து வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள்மீது பதிவு செய்யப்படும் எனவும் அஜித் ரோஹான மேலும் தெரிவித்தார்.
Post a Comment