பெற்ற மகளின் தலையை துண்டித்து காவல் நிலையம் எடுத்துச் சென்ற தந்தை.
உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டம், பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ்குமார் காய்கறி வியாபாரம் செய்துவருகின்றார்.
குறித்த நபருக்கு 17 வயது மகள் உள்ளார். இந்தநிலையில், சர்வேஷ்குமாரின் மகள் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, மகளின் காதல் விஷயத்தை அறிந்த சர்வேஷ்குமார் மகளை எச்சரித்து உள்ளார். ஆனாலும் அவரது மகள் காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது மகள் காதலருடன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சர்வேஷ்குமார்,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மகளை கொலை செய்துள்ளார்.
மேலும், மகளை கொலை செய்துவிட்டு தலையை துண்டித்து, கையோடு எடுத்து காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
Post a Comment