முஸ்லிம்களின் புனித நூலான குரானிலுள்ள விடயங்களை எழுதிய ஆவணங்களுடன் கருப்பு ஞாயிறு திருப்பலி இடம் பெற்றதேவாலயத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை எனத் தெரிவித்து பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அழைப்பு விடுக்கப்பட்ட கருப்பு ஞாயிறு எதிர்ப்பு போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றது.
இந்த நிலையில் கட்டுகஸ்தோட்டை − சியம்பலாகஸ்தென்ன கத்தோலிக்க தேவாலயத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பு ஞாயிறு திருப்பலி இடம்பெற்றது.
இந்த முஸ்லிம்களின் புனித நூலான குரானிலுள்ள விடயங்களை எழுதிய ஆவணங்களுடன் வருகை தந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண், தேவாலயத்திற்குள் வருகை தந்த வேளையிலிருந்து, அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது பெயர் முஸ்லிம் பெயரை ஒத்ததாக இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில், குறித்த பெண்ணை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
53 வயதான அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே, பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment