யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சுற்றிவழைத்த கடற்படையினர்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது 239 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடற் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையின் போது, மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும், சந்தேக நபர்களையும் பளை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும், நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment