கொழும்பில் காணாமல் போன சிறுவன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - மவுண்ட்லவனியா பொலிஸ் பிரிவில் 16 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரன் தெரிவித்துள்ளார்.
Aldon Devon Kenny என்ற சிறுவனே காணாமல் போனவனாவான்.
பம்பலப்பிட்டிய புனித பீட்டர் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் கல்வி கற்கும் மாணவன் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுவன் நேற்று காலை தனது வீட்டை விட்டு வெளியேறியநிலையில் காணாமற் போயுள்ளான்.
இந்த நிலையில் சிறுவன் வேறொரு இடத்தில் தங்கியிருந்ததாகவும், இன்று மாலை பாதிப்பில்லாமல் வீடு திரும்பியதாகவும் அவனது சகோதரன் தனது இன்ஸ்ரகிராமில் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்க பல பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment