கொரோனாவால் ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் மரணம்.
கொரோனா வைரசின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ள நாடு பிரேசில் ஆகும். அங்கு இதுவரை 1 கோடியே 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசின் பிடிக்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவை தொடர்ந்து இந்த நாடு அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,286 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் அங்கு அதிகபட்ச பலி இதுதான்.
இதுவரை அங்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 370 ஆகும்.
மேலும், கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் சிக்கித்தவிப்பதற்கு, அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோவின் முட்டாள்தனமான முடிவுகள்தான் காரணம் என்று முன்னாள் அதிபர் லூயிஸ் இனேசியோ லுலா டா சில்வா சாடி உளளார்.
கொரோனாவின் மிக மோசமான தருணத்தில் பிரேசில் சிக்கி உள்ளதாக அந்த நாட்டின் ஆராய்ச்சியாளரும், மருத்துவருமான மார்கரெத் டால்கொல்மா தெரிவித்துள்ளார்.
Post a Comment