Header Ads

test

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விடுதலை - கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவிப்பு.

 முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை, லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மொஹான் பீரிஸ் மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுபாசினி சேனாநாயக்க நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி முன்னாள் பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ், நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ், மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சீ பெர்டினான்ட் ஆகியோர் லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்து வழக்குகளிலிருந்து இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியொன்றின் கொள்வனவு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தவறியமையினால் ஊழல் மோசடி தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து நல்லாட்சிக் காலத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments