போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் கலந்துரையாடல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்ததாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் கலந்துரையாடல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்ததாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் கூறினார்.
எனினும் அவர்களால் ஜனநாயகத்தின் பாதையில் செல்ல முடியவில்லை என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்தன.
இதனால் பல அப்பாவி உயிர்கள் பறிபோனதாகவும், இதனால் பல பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு புலிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, இலங்கை மக்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து விடு விப்பதற்காக 2009 இல் ஒரு மனிதாபிமான நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த இருண்ட சகாப்தத்திலிருந்து இலங்கை வெகுதூரம் சென்று நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்ப முடிந்தது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் கூறினார்.
Post a Comment