மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கு அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தைரியமான பெண்மணி என்ற விருதை வழங்கியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரங்கத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ள நிலையில் இலங்கையின் மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தைரியமான பெண்மணி என்ற விருதை வழங்கியுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தால் நேற்று உலகெங்கிலும் இருந்து விருது பெறுபவர்களின் பட்டியலை அறிவிக்கப்பட்டிருந்தது இதில் ஒருவராக ரனிதா ஞானராஜாவும் இடம் பிடித்துள்ளார்
சிறிலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் விடுக்கப்பட்டபோதிலும், ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக ரனிதா ஞானராஜா தொடர்ந்தும் போராடி வருவதாகவும் அமெரிக்கவெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இலவச சட்ட உதவி உட்பட்ட சேவைகளை வழங்கும் நீதிக்காக ரனிதா ஞானராஜா தனதுவாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம குறிப்பிடப்பட்டுள்ளது
இவர்களுக்குரிய விருது வழங்கும் மெய்நிகர் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ராஜாங்கசெயலாளர் அந்தனி பிளிங்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
Post a Comment