நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்லவென்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்லவென்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஊடாக பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை ராஹுல மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய வித்தியாலயங்களுக்கு விஜயம் செய்த போதே அவர் இதனைக் கூறினார்.
பாடசாலை பாடத்திட்டங்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் தற்போதைய தொழில் வாய்ப்புக்களுக்கு இணைந்ததாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, தகவல், கணனி பாடத்திட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
Post a Comment