Header Ads

test

இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒருவர் பலி - திருகோணமலையில் சம்பவம்.

திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை 5ம் கட்டை பகுதியில் இன்று காலை (30) வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்வண்டியை வேகமாக வந்து கொண்டிருந்த கார் மோதி தள்ளியதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - 

மோட்டார் வண்டி ஓட்டுனர்  கப்பல்துறை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  அந்தோனி (48வயது), என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்தவராவார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments