நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பாகங்களிலும் மாத்தளை,பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment