மணிவண்ணன் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் யாழில் சத்திப்பு
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதில் மாநகர முதல்வரால், இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் நில ஆக்கிரமிப்புகள், கடந்த காலங்களில் தரப்படுத்தல் ரீதியாக தமிழ் மாணவர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள், தமிழ் மக்களின் ஜனநாயக வழி உரிமைப் போராட்டத்தினை நசுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், எதிர்கால யாழ் மாநகர அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
Post a Comment