Header Ads

test

இலங்கை பெண்ணிடம் பணமோசடி செய்த நடிகர் ஆர்யா.

 சமீபத்தில் நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி பணமோசடி செய்ததாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் ஒன்றினை தெரிவித்திருந்தார். தற்போது இவர் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாகவும், திருமணம் செய்ய மறுத்ததோடு, பணத்தினையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும கூறப்படுகின்றது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்ததன் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற வேண்டும் என ஆர்யா மிரட்டியதாக ஒரு சாட்டிங்கை பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் பங்கேற்ற சமயத்தில் ஆர்யாவிடம் செய்த சாட்டிங் ஹிஷ்டரிகளையும் ஈழப்பெண் வெளியிட்டுள்ளார்.

அதில் பிரபல ஹீரோ நீ, என்னிடம் பிச்சை கேட்கிறாய், உங்கள் ஊழியர்கள் பிச்சைக்காரன் என நினைக்கிறார்களோ இல்லையோ, நான் நினைக்கிறேன் என அந்த பெண் கேள்வி எழுப்ப தனக்கு நிறைய கடன்கள் இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஷோவில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்யா.

அதே போல திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து கேட்ட போதும் அப்பா எடுத்த முடிவு என்று நழுவிய ஆர்யா, எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உடனடியாக நிறுத்தி விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை ஆர்யா கூறியது தெரியவந்துள்ளது.





No comments